அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்...


அரசுப்பள்ளிகளில்
குழந்தைகளைச் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

 (Benefits of Enrolling Children in Government Schools)...

_அரசுப்பள்ளி  நம்பள்ளி....!

சேர்த்திடுங்கள் நம் குழந்தைகளை அங்கே...!

*அரசுப் பள்ளிகளில்* 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 
*மாணவர்கள் சேர்க்கை*
 தொடங்கியது... 

              தமிழ்நாடுஅரசு அறிவிப்பு...!

✳️LKG முதல்  8ஆம் வகுப்பு வரை.

 ✳️தெரிந்தவர்கள் புதுப்பித்துக் கொள்க..

✳️ தெரியாதவர்கள் தெரிந்துகொள்க..

✳️அரசுப் பள்ளியில் பயின்றால்....

✳️கட்டணமில்லா கல்வி...

✳️ ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியில் 
20% முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

✳️ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி (மருத்துவம், பொறியியல், வேளாண்மை ஓமியோபதி மருத்துவம், சித்த மருத்துவம் , ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை & அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில 
7.5 % முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

✳️பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.

✳️6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி.

✳️மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.

✳️ நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500 , 

ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000, 

ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 1,500 வழங்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்களுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.

✳️விலையில்லா புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கும்...

✳️விலையில்லா  குறிப்பேடுகள்- 3 பருவங்களுக்கும்..

✳️விலையில்லா சீருடைகள்- 4 செட்.

✳️விலையில்லா புத்தகப்பை.

✳️விலையில்லா காலணிகள்.

✳️வண்ண பென்சில்கள்.

✳️கணித உபகரணப் பெட்டி.

✳️புவியியல்  வரைபட நூல்.

✳️தினந்தோறும்  முட்டையுடன் சத்துணவு.

✳️இலவச பேருந்து பயண அட்டை...

✳️ போட்டிகளில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்...

✳️ அரசுப்பள்ளி மாணவ மாணவியர் வாசிப்பு திறன் வளர்க்க தேன்சிட்டு மாத இதழ்...

✳️ விலையில்லா மிதிவண்டி...

✳️ விலையில்லா மடிக்கணினி...

இன்னும் நன்மைகள் ஏராளம் ஏராளம்....

"அரசுப்பள்ளி வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம்"....

அன்பு பெற்றோர்களே, 
தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிக  ளில் சேர்ப்பீர்...

 அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடுவீர்......

Post a Comment

0 Comments