இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்


2020 - 2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பார்லி.,யில் இன்று (பிப்.,1) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது மத்தியில் மோடி அரசின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் 2 வது பட்ஜெட். லோக்சபாவில் இன்று காலை 11 மணியளவில் மத்திய பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். தொடர்ந்து, பணவீக்கம் அதிகரிப்பு, பொருளாதாரம், வேலையின்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு, வரி வருவாய் குறைவு போன்ற பல்வேறு பிரச்னைகளால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சரிவும் அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த பட்ஜெட்டிலாவது புதிய பல்வேறு சிறப்பு திட்டங்களும் முக்கிய அம்சங்களும் இடம்பெறும் என பல தரப்புகளிலிருந்தும் எதிர்பார்ப்பு நிலகிறது.பொருளாதாரம் சரிந்தநிலையில் வேலையில்லா இளைஞர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதாரத்தை பலப்படுத்துதல், கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, அதன்மூலமும் பொருளாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோரையும் அவர்களது தொழில்களையும் ஊக்குவிக்கும் திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெறலாம்என எதிர்பார்க்கப்படுகிறது. வரி வருவாய் சரிவு: நேரடி வரி விதிப்பு மூலம் ரூ.13.35 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்தநிலையில் வரி வருவாயாக ரூ.6 லட்சம் கோடி மட்டுமே கிடைத்ததாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, ஜிஎஸ்டி வரிவருவாயும் பொருளாதார சரிவை மேம்படுத்தவில்லை. பொருளாதார மந்த நிலை, போலி ரசீதுகள் மூலம் மோசடியாக மிகை வரியைத் திரும்பப் பெறுவது, ஜிஎஸ்டி வரி வசூலில் உள்ள குறைபாடுகள் ஆகியவை காரணமாக நிகழாண்டில் அரசுக்கு ரூ.80,000 கோடி இழப்பு ஏற்படு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.முன்னதாக இந்த பட்ஜெட்டிற்காக பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு சிறப்பு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், முக்கிய தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள், முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலருடனும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட், வருவாய் பற்றாக்குறைகளை கட்டுக்குள் கொண்டு வந்து பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை( எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்படியான பட்ஜெட்டை) தாக்கல் செய்வது நிதியமைச்சருக்கு சவாலான ஒன்றாக உள்ளது.

Post a Comment

0 Comments