திறனாய்வு தேர்வில்மாவட்ட முதலிடம்

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நடத்திய ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கையிலும், மதிப்பெண் அடிப்படையிலும் வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி மாவட்ட முதலிடம் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் இத்தேர்வில் வருவாய் மாவட்ட அளவில் 9ம் வகுப்பு பயிலும் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இம்மாணவர்களுக்கு 12ம் வகுப்பு வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக தலா ரூ.ஆயிரம் வீதம் ரூ.4000 கிடைக்கும்.2019-20ம் கல்வியாண்டில் தேர்வானவர்களில் 33 பேர் வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள். தேர்ச்சி எண்ணிக்கை அடிப்படையில் மாவட்ட அளவில் இது முதலிடம். மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட அளவில் மாணவர் லோகநாதன் முதலிடம், பிரசன்னா 2ம் இடம் பெற் றனர்.இம் மாணவர்கள், அவரது ஆசிரியர்கள் செந்தில்குமார், கிருத்திகா, கார்த்திகா, கருப்பையா ஆகியோரை தாளாளர் ஆர்.கே.பெருமாள், பி.டி.ஏ., தலைவர் குப்பாச்சி, இயக்குனர் அருள்மணி, தலைமையாசிரியர் ராமு பாராட்டி னர்.

Post a Comment

0 Comments