Income Tax Attension


Income Tax Attension

2023 பிப்ரவரி மாத ஊதியப்பட்டியல் தயார் செய்திடும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

1) 2022-23 ஆம் ஆண்டுக்கு உரிய வருமானவரி படிவம் தயார் செய்து தொழில்வரி செலுத்திய ரசீது மற்றும் அரசு பிடித்தங்கள் (Tpf &Gpf, Cps,Fbf, Spf,Pli ) தவிர மற்ற சேமிப்புகளுக்கு உரிய ஒரிஜினல் ரசீதுகளுடன் ஒரு காப்பியை அலுவலகத்தில் கொடுத்து சரி பார்த்து அதன் பின் தேவையான வருமானவரி படிவங்களுடன் தேவையான ஒரிஜினல் ரசீது மற்றவற்றை ஜெராக்ஸ் எடுத்து தனியர் சுய கையொப்பத்துடன் சான்றொப்பம் பெற்று 
ஊதியபட்டியல் (Aided School ) 
ஊதியகேட்பு பட்டியல் (Union School ) ஆகியவற்றை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதிக்குள் கொடுத்தால் மட்டுமே பிப்ரவரி மாத கடைசியில் அவரவர் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்க இயலும் என்பதை கவனத்தில் கொண்டு விரைந்து செயல்படுங்கள்.

2) சேமிப்புக்கு காட்டப்படும் ரசீதுகள் அனைத்தும் 01-04-2022 க்கு பின் 31-03-2023 க்குள் இருக்கவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். 

3) தங்கள் பிள்ளைகளின்  கல்வி கட்டணரசீதுகள் Tution Fess மட்டும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.

4)இரண்டாவது பக்கத்தில் கழிக்கபடும் NHIS தொகை 3600/- உடன் ஸ்டார் ஹெல்த் காப்பீடு செய்து அந்த காப்பீடு IT U/S 80D யில் கழித்து கொள்ள விதி இருப்பின் இரண்டையும் சேர்த்து மொத்தம் 25,000/- மட்டும் கழித்து கொள்ள இயலும்.

5) வருமானவரி படிவத்தில் வருமானவரி தனியாகவும் செஸ் தனியாகவும் பிரித்து காட்டவேண்டும். அது போல் பிப்ரவரி மாதத்தில் பிடிக்க வேண்டிய வருமானவரி தனியாகவும் செஸ் தனியாகவும் பிரித்து காட்டுவத்துடன் ஊதிய கேட்பு பட்டியலில் கீழ்கண்டவாறு 
(IT+cess = Total ) எழுதி காட்டவேண்டும். 

நன்றி !!

Post a Comment

0 Comments