கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரசார தன்னார்வலராக தாமாக முன்வந்து, பொது மக்களுக்கு சமூகப்பணி ஆற்றி வருகிறார் அரசுப்பள்ளி ஆசிரியர் அ.ஷாஜஹான்
.......
இவர் திண்டுக்கல் மாவட்டம்,
பிள்ளையார் நத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆண்டுகளாக கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்...இவர் கல்விப்பணி மட்டுமில்லாமல் தமிழ்ப்பணி, நாட்டுப்புறக்கலைப்பணி மற்றும் சமூகப்பணி என பல்வேறு துறைகளில் ஆர்வலராகவும் மற்றும் சமூகப்பணிகளை மேற்கொண்டும் வருகிறார். இன்றைய காலக்கட்டத்தில் உலகெங்கும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நம் பொதுமக்களுக்கு வராமல் இருப்பதற்காக, சுத்தம், சுகாதாரம் மற்றும் மனித நேயம் மிக்க சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான , விழிப்புணர்வு பிரசார தன்னார்வலராக, அரசுத்துறையோடும் மற்றும் தொண்டு நிறுவனங்களோடும் இணைந்து சமூகப்பணியாற்றி கொண்டு வருகிறார். அவர் பேசும் போது, கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க நமது உடலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும், நாம் வசிக்கும் சுற்றுப்புறத்தை எவ்வாறு பேணிக்காக்க
வேண்டும் என்பதை பற்றியும் மிக தெளிவாக, விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலமாக விளக்கி கொண்டும் வருகிறார் அரசுப்பள்ளி ஆசிரியர் அ.ஷாஜஹான்.




0 Comments