அறிவியல் தகவல் - தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிறந்த தினம்!!



இன்று பிறந்த நாள்:- பிப்ரவரி-11.

ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட  அதிகமான கருவிகளை உருவாக்கிய 
அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்-
 தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) பிறந்த தினம்.

பிறப்பு:-

அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிப்ரவரி- 11, 1847 ஆம் ஆண்டு
பிறந்தார். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு குடியேறிய பிறகு அப்பா மர வியாபாராம் செய்தார். இவரது
பெற்றோர்கள் சாமுவேல் ஓக்டென் எடிசன், ஜூனியர்,
நேன்சி மேத்தீவ்ஸ் எலியட் ஆவார்.
சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
ஆசிரியர் திட்டியதால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். 
அவரது படிக்கும் ஆர்வத்தை தூண்ட அம்மா இவருக்கு ஒவ்வொரு புத்தகம் படித்த முடித்த பிறகு 10 சென்ட் அளித்து உற்சாகப்படுத்தினார்.
மேலும் ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங் களை 11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார்.
பிறகு தனது 21 ஆம் வயதில், மைக்கேல் பாரடேயின் செய்தித்தாளில் இருந்த மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார்.

பணிகள்:-

1860களின் தொடக்கத்தில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது. அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே ஆகும்.  பின்னர் வெசுடன் யூனியன் அலுவலகத்தில் வேலை செய்தார். 
ஒரு முறை காரீய-அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி, பவனின் முதலாளி இருந்த அறைக்குள் பாய்ந்ததால் அவரது வேலை பறிபோனது.
அதன் பின்னர் இரயில்நிலையத்தில் நொறுக்குகளும் மிட்டாய்களும் விற்றார்.  இரயில் வண்டியின் ஒரு பெட்டியை அச்சகமாக மாற்றி அதிலிருந்தபடியே 1862-இல் ”த வீக்லி எரால்டு” என்ற வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். அதுவும், அக்டோபர் 28, 1868 அன்று (மின் வாக்குப்பதிவி) முதல் காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.

ஆராய்ச்சிகள்:-

1869 இல் தன் 22 ஆம் வயதில் 'இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ' பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார். அங்கு "பிராங்க் போப்" என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் உலகப் பதிப்பி ' (Edison Universal Stock Printer), மற்றும் வேறு பதிக்கும் கருவிகளையும் உருவாக்கினார். 
மேலும் ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா (Electric Pen), பிரதி எடுப்பி (Mimeograph) போன்ற சாதனங்கள் உருவாகினார்.  இசைத்தட்டு (கிராமஃபோன்) (Phonograph) கண்டுபிடிக்கவும் வழிவகுத்தது.
1877 இல் எதிர்பாராதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி (கிராமஃபோன்) ஆகும்.
தகரத்தாள் ஒலிவரைவி [Tinfoil Phonograph] என்று பெயரிட்டார். 
1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்தபோது, அந் நிகழ்ச்சிக்கு 'எடிசன் விளைவு [Edison Effect] என்று பெயர் கொடுத்தார்.
எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன்படுத்தி நுண்ணுனர் மானி என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். 
1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope] ஆகும்.
மேலும் தன் வாழ்நாளில் கண்டறிந்த 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றார்.
மேலும் எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிம நிறுவனத்தை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.
ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். தனது கண்டுபிடிப்புகளை  பற்றி கேட்டால், ‘நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார்.

இதழ்:-

1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழ் ஆகும்.

விருதுகள்:-

மென்லோ பூங்காவின் மேதை என்ற பட்டம் பெற்றார்.

மறைவு:-

அக்டோபர்-18, 1931ஆம் ஆண்டு,
வெஸ்ட் ஆரஞ்சு, நியூஜெர்சி,  அமெரிக்காவில்
மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

இவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின் பேரில், அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.

Post a Comment

0 Comments